04 March 2010

விண்ணை தாண்டி வருவாயா

கடந்த வார இறுதியில் (வாரநாட்கள் அல்லாத மற்ற நாட்களை தமிழில் எப்படி கூறுவது?) "விண்ணை தாண்டி வருவாயா" படத்தை சென்னை சாந்தம் திரையரங்கில் பார்த்தேன்.

ஏ ஆர் ரஹ்மான் ஏமாற்றி விட்டார் என்றே தோன்றுகிறது. படத்தில் ஒரு கட்டத்தில் அவரது பழைய பாடலான "முஸ்த(அக்கு)பா முஸ்த(அக்கு)பா" பாடல் வரும்பொழுது அவரது இசை-யில் உள்ள இறக்கம் தெளிவாகிறது. அவரது பழைய பாடல்களில் உள்ள வித்தை(மேஜிக்) இப்பொழுது குறைந்துவிட்டதாக உணர்ந்தேன். அல்லது எனக்கு வயதாகிவிட்டது(அவருக்கும்தானே).

கௌதம் மேனன் "வேட்டையாடு விளையாடு" திரைபடத்தில் போட்டதை போல, "Another episode in a young mans pursuit of love" என போட்டு இருக்கலாம். "வேட்டையாடு விளையாடு" திரைப்படம் "காக்க காக்க" திரைபடத்தை நினைவூட்டுவதை போல, இப்படம் வாரணம் ஆயிரம் படத்தினை நினைவூட்டுகிறது.

படத்தின் உச்ச கட்ட காட்சிகள் பிடித்தது. ஆனால் படம் எப்பொழுது முடிவடையும் என ஏங்க வைத்து விட்டது. படத்தினை ஒரு அரை மணிநேரம் குறைவாக வரும் வகையில் எடுத்திருக்கலாம்.

படத்தின் முடிவில் ஒரு கதாபாத்திரம் "..நான் சாந்தம் தியேட்டருக்கு போறேன்.." என கூறுவது பிடித்தது! ஒவ்வொரு திரை அரங்கிலும் அந்த அரங்கத்தின் பெயர் வருமாறு செய்திருகிறார்களா என தெரியவில்லை!

2 comments:

Nikanth Karthikesan said...

ஆ.. அது சாந்தம் திரையரங்கமில்லை, சங்கம் திரையரங்கம்!
சுட்டி காட்டியமைக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி

Sankarlal's Thoughts said...

சிலம்பரசனின் விரல் வித்தையை தடுத்ததற்கக்காகவே இயக்குனைரை பாராட்டலாம். படம் மெதுவாக நகர்வதை போன்று தோன்ற காரணம் இசையே. பாடல்கள் நன்றாக இருந்திருந்தால் போர்அடிச்சிருக்காது.